அந்நியப்படைகள் இந்தியாவுக்குள் நுழையாமல் தடுக்கவேண்டியது யார் பொறுப்பு?
சிறுபான்மை முஸ்லிம்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, அதில் 'ஐநா' தலையிட கோரிக்கை விடுத்தார், உத்திரப்பிரதேச அமைச்சர் 'ஆசம் கான்'
அதையடுத்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் குழு ஒன்று, இன்று 'தேவ்பந்த்' மதரசாவுக்கு வருகை புரிந்து, துணை முதல்வர் 'மவுலவி அப்துல் காலிக்' அவர்களுடன் 1 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியது.
எந்த நாட்டுக்குள் எப்படி மூக்கை நுழைக்கலாம்? என விழிமேல் விழிவைத்து காத்திருக்கும் அமெரிக்காவுக்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந்து வந்த அழைப்பு, மிகவும் வசதியாகப் போய்விட்டது.
இவ்விஷயத்தில், முஸ்லிம்களை குறை சொல்வதில் நியாயம் இல்லை, என்பதை இந்திய பொது சமூகம் புரிந்துக் கொள்ளவேண்டும்.
மோடி அரசு பொறுப்பேற்றதிலிருந்து, முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதோடு, சங்பரிவார் அமைப்பை சேர்ந்த எம்பி, எம்.எல்.ஏ. உள்ளிட்ட முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
அடி தாங்க முடியாமல் 'ஐநா'வை அழைக்கும் முஸ்லிம்களின் அழைப்பை ஏற்று, அந்நியப்படைகள் நாட்டுக்குள் புகுந்து இந்தியாவை சுடுகாடாக மாற்றிவிட்டால், அதற்கு எவ்விதத்திலும் முஸ்லிம்கள் பொறுப்பாக முடியாது.
எனவே, இந்திய சிறுபான்மை முஸ்லிம்களை அனைத்து வித அச்சுறுத்தல்களை விட்டும் பாதுக்காக்க வேண்டியது, இந்திய அரசின் பொறுப்பாகும்.
பொறுப்பை உணர்ந்து செயல்படுவாரா மோடி?
No comments:
Post a Comment