அல் அக்சா பள்ளிவாசலில் நான்காவது நாளாகவும் தொடரும் மோதல் - Deen or Dunia

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, October 14, 2015

அல் அக்சா பள்ளிவாசலில் நான்காவது நாளாகவும் தொடரும் மோதல்

கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள அல் அக்சா பள்ளிவாசலில் இஸ்ரேலிய படையினருக்கும், பலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மோதல் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. அந்தவகையில், இஸ்ரேல் படையினர் புனித தலத்தின் கூரைப் பகுதியில் ஏறி நிற்பதை அவதானிக்கக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் படையினர், கூரையிலிருந்து நடத்திய இறப்பர் புளொட் தாக்குதலில் 17 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக ஜெருசலேம் அலுவலக திணைக்களத்தின் தலைவர், சுலைமான் அஹமட் தெரிவித்தார்.
அதேவேளை, பாலஸ்தீனியர்கள் பள்ளிவாசல் உள்ளிருந்து கற்களையும், கட்டைகளையும் இஸ்ரேல் படையினர் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பாலஸ்தீனியர்களை உள்ளே வைத்து படையினர் பள்ளிவாசலின் நுழைவாயில்களை மூடியுள்ளனர்.
அல் அக்சா பள்ளிவாசலானது யூதர்களினதும், முஸ்லிம்களினதும் புனித தலமாக போற்றப்பட்டு வருவதுடன், இங்கு அடிக்கடி வன்முறை சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages