ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இஸ்லாமுக்கு எதிரானது: இந்திய முஸ்லிம் கூட்டமைப்பு கண்டிபபு - Deen or Dunia

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, December 14, 2015

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இஸ்லாமுக்கு எதிரானது: இந்திய முஸ்லிம் கூட்டமைப்பு கண்டிபபு

Indian Muslims have condemned ISIS as un-Islamicடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக அகில இந்திய முஸ்லிம் சங்கங்கள் பலவும், இணைந்து, கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இதுகுறித்து AIMMM எனப்படும் அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது: அல்-கொய்தா, ஐஎஸ்ஐெஸ், போகோ ஹாரம் மற்றும் லஷ்கர்-இ-தய்பா போன்ற பயங்கரவாத இயங்கங்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டில் இருந்து ஆதரவு அளிப்போர், நிதி உதவி, பாதுகாப்பு உதவிகளை செய்வோர் கண்டனத்திற்கு உரியவர்கள். பாரீஸ் உட்பட, உலகில் நடைபெறும் தீவிரவாத செயல்கள் அனைத்துமே கண்டனத்திற்கு உரியது. Indian Muslims have condemned ISIS as un-Islamic அதேநேரம், பாலஸ்தீனத்தில் தங்கள் இடத்தை மீட்க போராடுவோர் மீது தீவிரவாத முத்திரை குத்த முடியாது. அவர்கள் தங்கள் பிறப்புரிமைக்காகத்தான் போராடி வருகிறார்கள். இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் தாக்கம் இல்லை என்று இந்திய அரசு கூறிவரும் நிலையில், பாதுகாப்பு வட்டாரங்கள் அதுபோன்ற ஊடுருவல், இந்திய முஸ்லிம்கள் மத்தியில் இருப்பதாக கூறி செய்திகளை ஊடகங்களின் வழியாக கசியவிடுகின்றன. இதன்மூலம், இஸ்லாமிய இளைஞர்களை மொத்தமாக கைது செய்ய வாய்ப்புள்ளது. இதில் இஸ்லாமிய இளைஞர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து பிரிவு மக்களுமே, ஐஎஸ்ஐஎஸ்சை எதிர்ப்பது திருப்தியளிக்கிறது. ஐஎஸ்ஐஎஸ் என்பது இஸ்லாமுக்கு எதிரான செயல்பாடுகள் கொண்ட அமைப்பாகும். இவ்வாறு அந்த அறிக்கை கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages