1. (நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ் – அவன் ஒருவனே! அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.; அவன் (எவரையும்) பெறவுமில்லை: (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும்; (எதுவும்) இல்லை. அல்குர்ஆன் ;112 இஃஹ்லாஸ்-ஏகத்துவம்:1-4).
2. நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” நீங்கள் (அதிலிருந்து) பிரிந்து விடவேண்டாம். அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடை (நிஃமத்)களை எண்ணிப் பாருங்கள். (ஆலஇம்ரான்: 3:103)
3. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன். (அல்மாயிதா: 5:3)
4. (மனித சமுதாயமே) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களைப் பின்பற்றாதீர்கள்: உங்களில் சிலரே நல்லுணர்வு பெறுகின்றீர்கள். (அல்அஃராஃப் 7:3)
தவ்ஹீத்வாதிகள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வோர்களின் குறுகிய கண்ணோட்டம்:
தவ்ஹீத் சிந்தனை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கும் இந்த
நாளில் தவ்ஹீதை நிலைநாட்ட, வரிந்து கொண்டு செயல்படுவோரும், தவ்ஹீதைச்
சரியாக புரிந்து கொண்டுள்ளனரா? என்பது இன்றளவும் கேள்விக்குறியே? தவறாக
புரிந்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டுவதாய் எவரும் தவறாய் புரிந்து கொள்ள
வேண்டாம். தவ்ஹீத்வாதிகள் என்று தங்களைத் தனிமைப்படுத்தி, பீற்றிக்
கொள்ளுபவர்கள் பேச்சும், நடைமுறையும் எமது கூற்றை மெய்ப்பிக்கும்.
இதிலிருந்து விடுபட்டோர் அரிதானவர்களாகவே இருப்பர். அதி தீவிர –
தவ்ஹீத்வாதிகள் பேச்சும் நடைமுறையும் நடுநிலைத் தவ்ஹீத்வாதிகள் முகத்தைச்
சுளிக்கச் செய்கிறது – என்றால், மற்றவர்கள் எதிர்க்கிறார்கள் என்று
அங்கலாய்ப்பதில் அர்த்தமிருக்கிறதா? இஸ்லாம், தவ்ஹீதிற்குத் தரும் விரிந்த
பொருளும், விளக்கமும், உயர்ந்த வாழ்க்கை இலட்சியமும் இன்று தவ்ஹீத்வாதிகள்
என்று பீற்றிக் கொள்வோர்களால் – குறுகிய வரையறைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
தவ்ஹீத், குறுகிய பிரிவினைவாதிகள் வரிந்து கொண்ட தூர நோக்கு இல்லாத வெற்று வேதாந்தம் என்ற மாயத் தோற்றம் . தமிழகத்தில் எப்படியோ தோற்றுவிக்கப்பட்டு விட்டது. அது வேரூன்றவும் இன்றைய விளம்பரத் தவ்ஹீத் விரும்பிகள் காரணமாகிக் கொண்டிருக்கிறார்கள். தவ்ஹீத் தங்களுக்கு மட்டும் சொந்தம் என்று தனிமைப்படுத்தி வருகிறார்கள். இந்த பிரிவினை மனப்பான்மையே தவ்ஹீதை குறுகிய தவறான கண்ணோட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது. இஸ்லாமிய தவ்ஹீத் நேற்றைய, இன்றைய, நாளைய முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனித சமுதாயம் முழுமைக்கும், எல்லாக் காலங்களிலும் பொதுவுடைமையாக்கப்பட வேண்டிய வாழ்க்கை நெறியாகும் என்பதை மிக, மிக அழுத்தமாய் இங்கே கோடிட்டுக் காட்ட விழைகிறோம்.
தவ்ஹீத் இஸ்லாத்தின் மூலக் கொள்கை – அன்றி, ஒரு கொள்கைப் பிரிவாருக்குரிய பிரிவுப் பெயர் அல்ல.
“தவ்ஹீத்” இஸ்லாத்தின் மூலக் கொள்கை – அன்றி-ஒரு கொள்கைப் பிரிவாரின்
தனியுடமை அல்ல. ஒரு கொள்கைப் பிரிவார், தங்களைத் தனிமைப்படுத்தி,
பிரித்துக் காட்ட, தங்கள் கூட்டமைப்பிற்கு இட்டுக் கொள்ளும் பிரிவுப்
பெயருமல்ல. இதை சம்பந்தப்பட்ட அனைவரின் சிந்தனைக்கும் கொண்டு வருகிறோம்.
தவ்ஹீத் ஒரு கொள்கைப் பிரிவாருக்கான தனிப் பெயருமல்ல: பிரிவுப் பெயருமல்ல:
இது துவக்கத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை.
சீரிய சிந்தனையாளர்கள் கூட மற்றவர்களிடமிருந்து, தங்களைத் தவ்ஹீத்வாதிகள் என்றே இனம் பிரித்துக் காட்டினார்கள். தங்களின் கூட்டமைப்பு- அஹ்லுஸ் ஸுன்னத் – வல் – ஜமாஅத்தார்களிடமிருந்து பிரத்தியேகப்படுத்தி, பிரித்துக்காட்ட- தவ்ஹீத் ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம் என்று பெயர் பொறித்துக் கொண்டார்கள். அதில் பெருமைப்பட்டும் கொண்டார்கள். இருக்கின்ற பிரிவுகள் போதாதென்று, இவர்கள் பங்கிற்கு, இவர்களும் ஒரு கொள்கைப் பிரிவைத் தோற்றுவித்து விட்டார்கள். எடுத்துக் காட்டினால், சம்மந்தப்பட்டவர்கள் ஜீரணிப்பது மிக, மிக சிரமமே.. சீறிப்பாய்கிறார்கள். என்ன செய்வது? உண்மை – சத்தியம் கசக்கத் தானே செய்யும்.
எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருந்தபோது, தவ்ஹீதைத் தனிப்படுத்தும் “ஸ்லோகம்;” எங்காவது எப்போதாவது கேட்கும் முனகலாயிருந்தது. அப்போது, பிரிவுப் பெயர் எதிர்ப்பாளர்கள் கூட – இதைப் பொருட்படுத்தவில்லை. அலட்சியப்படுத்திவிட்டார்கள் போலும்” அல்ல அல்ல. இது காலப்போக்கில் கரைந்து விடும் என்று கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்கள். ஆனால் எண்ணிக்கையில் இவர்கள் கூடுதலாகியபோது, முனகலாயிருந்தது பரவலான முழக்கமாயிற்று.
பத்து, நூறு, ஆயிரம் என்றோ, பத்தாயிரம் என்றோ, அதைவிட கூடுதலாகவோ – பக்தர்கள் கூட்டம் கூடியவுடன் – குழுக்கள் அல்லது சபைகள், குரூப்கள் அமைத்துக் கொள்ளவோ – இயக்கங்கள் காணவோ – அமைப்புகள் ஏற்படுத்தவோ – ஓரிறைக் கொள்கை (தவ்ஹீத்) அல்லாஹ்வால் அருளப்பட்டதல்ல. மாறாக –
ஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டும் ஒரே இறைவனாக ஏற்பதன் மூலம் மனித சமுதாயம் ஒன்றுபடவும் வேண்டும்: ஒன்றுபடுத்தப்படவும் வேண்டும் என்ற உன்னத இலட்சியத்திற்காக அல்லாஹ்வால், அருளப்பட்ட அருட்கொடையே – ஓரிறைக் கொள்கை.
No comments:
Post a Comment