இலங்கையில் ஐ.எஸ் அமைப்பா? - Deen or Dunia

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, December 21, 2015

இலங்கையில் ஐ.எஸ் அமைப்பா?

]இலங்கையில் ஐ.எஸ் அமைப்பா?இலங்கையிலிருந்து செயற்படும் ஐ.எஸ். அமைப்பின் முகவர் ஒருவர் தொடர்பான தகவல்களை இந்தியாவின் பிரபலஇணையத்தளமொன்று அறிவித்துள்ளது.

16 வயதையுடைய இந்திய பெண் ஒருவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்தப் பெண் இலங்கையிலுள்ள முகவர் ஒருவரினூடாக ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக இந்திய பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பெற்றோர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து, இந்திய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இதன்போது,  இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய பாதுகாப்புப் பிரிவு இந்த பெண்ணின் சமூக வலைத்தளங்கள், வட்ஸ்அப் போன்ற கணக்குகளை பரிசிலனை செய்த போது தொடர்புகள் பரிமாறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் த டைம்ஸ் ஒப் இந்தியா இணையத்தளத்தை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages