இஸ்ரேல் தூதரகம் நிறுவுவதை தடுத்து நிறுத்துங்கள் – இமாம் அலி ஓமர் யாகூப் - Deen or Dunia

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, December 21, 2015

இஸ்ரேல் தூதரகம் நிறுவுவதை தடுத்து நிறுத்துங்கள் – இமாம் அலி ஓமர் யாகூப்

இஸ்ரேல் தூதரகம் நிறுவுவதை தடுத்து நிறுத்துங்கள் –  இமாம் அலி ஓமர் யாகூப்இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் நிறுவுவதை தடுத்து நிறுத்தும் படி, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள புனித மஸ்ஜிதுல் அல்-அக்ஸா (பைத்துல் முகத்தஸ்) பள்ளிவாசலின் பிரதம இமாம் அஷ்ஷேக் இமாம் அலி ஓமர் யாகூப் அல் அப்பாஸி அமைச்சர் ராஜித செனரத்தவிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று இரவு அமைச்சர் ஹிஸ்புல்லாவின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற இராப்போசன நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

மூன்றுநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அஷ்ஷேக் இமாம் அலி ஓமர் யாகூப் அல் அப்பாஸி நேற்று இரவு இராப்போசன நிகழ்வின் போது இசாத் தொழுகையையும் நடத்திய, அரவு மொழியில் சொற்பொழிவொன்றையும் ஆற்றினார்.

இந் நிகழ்வில் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், துருக்கி, ஈரான், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பலஸ்தீன், சவுதி, போன்ற நாடுகளின் தூதுவாகள், கல்வியியலாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages